செங்கல்பட்டு பகுதியில், 3 வயது சிறுமியின் தலையில் சிக்கிய அலுமினிய பாத்திரத்தை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக அகற்றினர்.செங்கல்பட்டு மாவட்டம் சின்ன மணி காத்திரு பகுதியைச் சேர்ந்த குழந்தை துருவதர்ஷினியின் தலையில் அலுமினிய பாத்திரம் மாட்டிக்கொண்டது.
இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு வந்த தீயணைப்புத்துறையினர், அலுமினிய பாத்திரத்தை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டியெடுத்து, குழந்தையை பத்திரமாக மீட்டனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.