மதுரையை நடுங்க வைத்த `பாகுபலி'.. சொந்த ஊரில் பிரமாண்ட வரவேற்பு

Update: 2025-01-19 02:35 GMT

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் இடம் பிடித்த பாகுபலி காளைக்கு, சொந்த ஊரான சேலம் அயோத்தியபட்டினத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், சேலம் மாவட்டம், அயோத்தியபட்டினத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரின் பாகுபலி காளை முதலிடம் பிடித்தது. காளை உரிமையாளருக்கு பரிசாக டிராக்டர் வழங்கப்பட்டது. சொந்த ஊர் திரும்பிய பாகுபலி காளை, அதன் உரிமையாளர் மற்றும் அவரது குழுவினருக்கு அயோத்தியபட்டினத்தில் தாரை தப்பட்டை முழங்க பட்டாசுகள் வெடித்து பொதுமக்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்