திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள்.மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு

Update: 2025-04-29 02:23 GMT

தாம்பரம் மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் அதிமுக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தங்கள் பகுதிகளில் எவ்வித அடிப்படை பணிகளும் நடைபெறவில்லை எனக் கூறி அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர். மேலும் தங்கள் பகுதிக்கு முறையான நிதி ஒதுக்க வில்லை என்றும், திமுக உறுப்பினர்கள் அநாகரிகமாக நடத்துவதாகவும் கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.   

Tags:    

மேலும் செய்திகள்