`அக்னி நட்சத்திரம்' - இனி தான் ஆரம்பமே..! - தீயாய் கொதிக்க போகுதாம்!

Update: 2025-05-04 08:27 GMT

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று முதல் தொடங்குகிறது. வருகிற 28 ஆம் தேதி வரை 25 நாட்கள் வரை இது நீடிக்கிறது. இந்த நாட்களில் சாதாரண நாட்களை விட வெப்பநிலை 100 டிகிரியை எட்டும். அக்னி நட்சத்திரத்தால் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும் என்பதால், பொதுமக்கள் தேவையின்றி வெளியில் நடமாட வேண்டாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, அதிகளவு தண்ணீர் குடிப்பதுடன், ஐஸ் சர்பத், தர்ப்பூசணி உள்ளிட்ட பழ வகைகளை அதிகம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்