Bike Set on Fire || அக்னி பிழம்பான மெக்கானிக் செட் - 15 டூவீலர்கள் தீ வைத்து எரிப்பு
செங்கல்பட்டில் மெக்கானிக் கடையில் நின்றிருந்த 15 இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முருகேசநார் தெருவை சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் வல்லம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்ற நேரத்தில் மர்ம நபர்கள் பழுது நீக்க வந்த இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புதுறையினர், தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் 15 இருசக்கர வாகனங்கள் தீயில் கருகின. விபத்து குறித்து செங்கல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.