நடிகர்கள் போதை பொருள் வழக்கு- லஞ்சம் பெற்ற காவலர்கள்?
போதை பொருள் வழக்கில் சிக்கிய நடிகர்களை கைது செய்யாமல் இருக்க காவலர்கள் லஞ்சம் பெற்றதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நுங்கம்பாக்கம் பாரில் ஏற்பட்ட தகராறு வழக்கு பின்னர் போதை பொருள் விற்பனை வழக்காக மாறியது. இந்த விவகாரத்தில் அஜய் வாண்டையார், பிரசாத், போதை பொருள் சப்ளையர் பிரதீப், போதை பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக இந்த வழக்கில் சிக்கிய நடிகர்கள் உள்ளிட்ட நபர்களிடம் கைது செய்யாமல் இருக்க ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தை சேர்ந்த இரண்டு உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஒரு காவல் ஆய்வாளர் சுமார் 50லட்சம் வரை லஞ்சம் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில் மூன்று அதிகாரிகளும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.