இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ், தனது குடும்பத்தினருடன் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தன்னுடைய மகன் நடிகர் சாந்தனுவின் பெயரில் அர்ச்சனை செய்த அவர் மனமுருகி பெருமாளை வழிபட்டார். பின்னர் அங்குள்ள கோமடத்தில் பசுக்களுக்கு கீரை கொடுத்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.