ரயில் டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்ற நபர் பாய்ந்த அதிரடி ஆக்சன்

Update: 2025-05-24 02:00 GMT

கோவையில் சட்டவிரோதமாக ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை நடத்திய அதிரடி சோதனையில், சட்டவிரோதமாக ரயில் டிக்கெட்டுகளை விற்று வந்த இம்ரான் ஹூசைன் சேக் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து ₹26,230 மதிப்புள்ள டிக்கெட்டுகள் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, ஒவ்வொரு டிக்கட்டுக்கும் ₹300 வரை கூடுதல் கட்டணம் வசூலித்து விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்