ACCIDENT || சாலையில் யூ டர்ன் போட்ட வாகனத்தின் மீது அதிவேகமாக மோதிய கார் வெளியான அதிர்ச்சி காட்சி

Update: 2025-06-13 04:27 GMT

ஆரணி அருகே சாலையில் யூ டர்ன் போட்ட இருசக்கர வாகனத்தை மின்னல் வேகத்தில் வந்த கார் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சிறுமூர் கிராமத்தை சேர்ந்த விஜய் என்பவர் தனது டூவீலரில் சேவூர் அருகே சென்றபோது, திடீரென சாலையின் நடுவே வாகனத்தில் யூ டர்ன் போட்டுள்ளார். அப்போது, பின்னால் வந்த கார் விஜயின் வாகனம் மீது அதிவேகமாக மோதியதில் விஜய் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தார். படுகாயமடைந்த விஜய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்