Accident|| அதிக லோடு ஏற்றிய லாரி.. ஓடும்போதே உருண்டோடிய டயர்

Update: 2025-11-08 11:58 GMT

புதுச்சேரி, ராஜீவ்காந்தி சதுக்கம் அருகே ஜல்லி ஏற்றி வந்த லாரி அதிக சுமை காரணமாக முன்சக்கரம் சேதமாகி விபத்திற்குள்ளானது. வாகன போக்குவரத்து குறைவாக இருந்ததால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சிக்னல் அருகே லாரி விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி லாரியை ஜல்லி கற்களை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் அதிகப்படியான லோடு ஏற்றி வந்த லாரி ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்