AC Blast | வெடித்து சிதறிய ஏசி - பெட்ரோல் பங்கில் 3 பேருக்கு நேர்ந்த கதி
பெட்ரோல் பங்கில் ஏசி கம்ப்ரசர் வெடித்ததில் 3 பேர் படுகாயம்
பல்லாவரம் அருகே அனகாபுத்தூரில் உள்ள பெட்ரோல் பங்கில், திடீரென பயங்கர சத்தத்துடன் ஏசி கம்ப்ரசர் வெடித்ததில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். அனகாபுத்தூர் பேருந்து நிலையம் அருகே புதியதாக திறக்கப்பட்ட தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில், ஏசி பொருத்தும் பணி நடைபெற்றது. அப்போது எதிபாராதவிதமாக ஏசி கம்ப்ரசர் இயந்திரம் வெடித்ததில், ஏசி பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த சபீர், முகிர்தீன், சபிருல்லா ஆகிய மூவரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து பங்க் ஊழியர்கள் உடனடியாக அவர்களை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.