500க்கும் மேற்பட்ட குடங்களின் பாலை ஊற்றி அபிஷேகம் - முருக பக்தர்கள் வழிபாடு
500க்கும் மேற்பட்ட குடங்களின் பாலை ஊற்றி அபிஷேகம் - முருக பக்தர்கள் வழிபாடு
ஆடி கிருத்திகை - பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு
திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 500க்கும் மேற்பட்ட பெண்கள் பாதயாத்திரையாக
பால்குடம் சுமந்தும், பலர் காவடி எடுத்தும் வந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த பால் மூலம் உற்சவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. ராஜ அலங்காரத்தில் தோன்றிய மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.