KulasekaraPattinam Mutharamman Temple | குலசை முத்தாரம்மன் கோயிலில் களைகட்டிய ஆடி மாத திருவிழா
புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆடி மாதத் திருவிழா களைகட்டியது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கும்பத்தை தலையில் சுமந்தபடி வந்த பக்தர்கள், முக்கிய வீதிகளில் ஊர்வலமாக ஆடிப்பாடியவாறு கோயிலை வந்தடைந்தனர். இதைத்தொடர்ந்து நடந்த வில்லிசை நிகழ்ச்சியை பலரும் கண்டுகளித்தனர்.