கடனை திருப்பித் தரக்கூறி ஆடைகளை கிழித்து பெண் மீது தாக்குதல்
நெல்லையில் வாங்கிய கடனை திரும்ப தரக்கூறி, பெண்ணின் ஆடைகளை கிழித்து தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை கேடிசி நகர் பகுதியில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் கிறிஸ்டிலா பென்சியா என்பவர் வரவேற்பாளராக பணி புரிந்து வருகிறார். இவர் முனியசாமி என்பவரிடம் 4 லட்ச ரூபாயை கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அழகு நிலையத்திற்குள் புகுந்த முனியசாமியின் மனைவி மற்றும் சிலர் தனது கணவரின் பணத்தை திருப்பித் தரக் கூறி தாக்கியுள்ளனர். ஆட்டோவில் தப்பிக்க முயன்ற கிறிஸ்டிலா பென்சியாவை வழிமறித்து, தாக்கி ஆடைகளை கிழித்ததாக தெரிகிறது. தகவலறிந்து வந்த போலீசார் இருதரப்பு புகார்களையும் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.