Thiruvannamalai | திருநங்கையுடன் நட்பான பெண் - குழந்தையை கடத்தி விட்டு ஓட்டம் பிடித்த திருநங்கை..
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, 5 மாத குழந்தையை கடத்திய சம்பவத்தில் திருநங்கை ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அக்ஷ்யா. இவருக்கு 5 மாத குழந்தை உள்ள நிலையில், மது என்ற திருநங்கையுடன் நட்பாக பழகி வந்தார். குழந்தையை தானே வளர்த்துக் கொள்வதாக திருநங்கை மது கேட்ட போது, அக்ஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், திருநங்கை மது குழந்தையை தன் பெற்றோரிடம் காண்பிக்க வேண்டும் என கொண்டு சென்று, குழந்தையை கடத்தியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து அக்ஷ்யா அளித்த புகாரின் பேரில் திருநங்கை மது கைது செய்யப்பட்டு, குழந்தை மீட்கப்பட்டது. திருநங்கை மது, அக்ஷ்யாவிற்கு சுமார் 6 லட்சம் ரூபாய் செலவு செய்ததாகவும், அதை திருப்பி கேட்டு குழந்தையை கடத்தியதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.