கொட்டும் பண மழையில் கேக் வெட்டிய திருநங்கை - பரமக்குடியை திரும்பி பார்க்க கொண்டாட்டம்
பரமக்குடியில் திருநங்கைகள் நடத்திய முளைப்பாரி திருவிழாவின் போது, ரூபாய் நோட்டுகளை பறக்க விட்டு பிறந்தநாள் கொண்டாடியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பரமக்குடி அருகே வேந்தோணி திருநங்கை நகரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் முழுக்க முழுக்க திருநங்கைகள் மட்டுமே அம்மனுக்கு அலங்காரம், அபிஷேகம் செய்து முளைப்பாரி திருவிழாவை நடத்துவது வழக்கம். முளைப்பாரி உற்சவத்தின் போது அபி என்ற திருநங்கைக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர். அப்போது திருநங்கை ஒருவர் 20 ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. திருவிழா குறித்து திருநங்கை ஓவியா கூறுகையில்,