சென்னை ராமாபுரம் அருகே மெட்ரோ பால தூண் விழுந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பூமியில் இருந்து தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது.
ராட்சத பால தூண் சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு தூண் பாலம் அகற்றப்பட்ட நிலையில், புதிதாக சாலையும் அமைக்கப்பட்டது. இந்நிலையில், சாலையின் பக்கவாட்டில் தண்ணீர் நீர் ஊற்று போல வெளியேறி வருகிறது. மெட்ரோ தூண் பாலம் விழுந்ததில் அடியில் இருந்த தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது