செம்பரம்பாக்கம் ஏரியில் திடீரென வீசிய துர்நாற்றம்..மிதந்ததை பார்த்து அதிர்ந்த மக்கள்
செம்பரம்பாக்கம் ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் பரபரப்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோடை காலத்தில் சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் முக்கிய ஏரியாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது நீரின் அளவு சற்று குறைந்து காணப்படும் நிலையில் ஆங்காங்கே மீன்கள் செத்து மிதக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இறந்து கிடக்கும் மீன்கள் செம்பரம்பாக்கம் ஏரியின் கரையில் ஒதுங்கி இருப்பதால் அங்கு நாய்கள் மற்றும் காகங்கள் இறந்து கிடக்கும் மீன்களை கவ்விக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் துர்நாற்றமும் வீசி வரும் நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.