பாட்டியை அடக்கம் செய்யும்போது வந்த திடீர் சந்தேகம் - அம்பலப்பட்ட மகள்வழி பேரன் எனும் காம அரக்கன்

Update: 2025-06-25 08:54 GMT

பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற பேரன் கைது

சேலம் ஓமலூர் அருகே பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற பேரனை போலீசார் கைது செய்தனர். தாரமங்கலம் அருகே சின்ன பிள்ளையூரை சேர்ந்த 74 வயது மூதாட்டி கடந்த 20-ம் தேதி இறந்ததாக கூறி உறவினர்கள் அடக்கம் செய்ய முயன்றனர். ஆனால், சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீசாருக்கு, தகவல் கொடுத்தனர். தொடர்ந்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்த நிலையில், கழுத்தை நெரித்து பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மூதாட்டியின் மகள் வழி பேரன் பிரகாஷ் சூதாட்டம் ஆட, பணம் கேட்டு தர மறுத்ததால், பாட்டியை பலாத்காரம் செய்து கொலை செய்து, ரூ.5 ஆயிரம் பணத்தை எடுத்துச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து பிரகாசை கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்