கோவிலில் திருமணம் செய்யும் மணமக்கள் அமர போட்டா போட்டி

Update: 2025-06-08 06:35 GMT

தான்தோன்றீஸ்வரர் கோவிலில் திருமணம் செய்யும் மணமக்கள் அமர போட்டா போட்டி.

மணமக்களின் உறவினர்கள் ஒருவருக்கொருவர் வாய்தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு.

உறவினர்கள் இடம் பிடிக்க பாய் போட்டு போட்டா.. போட்டி.. சண்டை போட்டு அதிகாலையில் வாய்தகராறில் ஈடுபட்ட காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலான சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒரு திருமணத்திற்கு மூவாயிரம் வரை கட்டணமாக வசூல் செய்யப்படும் சூழலில், டோக்கேன் எண் அடிப்படையில் திருமணங்கள் நடைபெறாமல், தாலி கட்டிகொண்ட மணமக்கள் எழுவதற்கு முன்பாகவே பாய் போடும் போட்டியில் வெல்பவர்களுக்கே திருமணம் செய்து வைக்கும் பரிதாப நிலை மாற வேண்டும். இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்