நெல்லையப்பர் கோவிலில் 45 ஆண்டுகளுக்கு பின் நடந்த அற்புதம்

Update: 2025-05-21 08:03 GMT

நெல்லையப்பர் வசந்த உற்சவத்தில் 45 ஆண்டுகளுக்கு பின் தங்க நாதஸ்வர இசை

பிரசித்திப்பெற்ற நெல்லையப்பர் கோவில் வசந்த உற்சவத்தில், 45 ஆண்டுகளுக்கு பிறகு தங்க நாதஸ்வரம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து தங்க நாதஸ்வரத்தில் தியாகராஜர் கீர்த்தனைகள் வாசிக்கப்பட்டு, சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் வசந்த மண்டபத்தில் வலம் வந்த நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் மெய்சிலிர்க்கக் கண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக, சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்