அதிக லோடோடு வளைவில் திரும்பியதால் இரண்டாக உடைந்த லாரி.. அதிர்ச்சி வீடியோ

Update: 2025-11-04 03:07 GMT

காஞ்சிபுரத்தில் இரும்பு ரோல்களை ஏற்றி சென்ற டாரஸ் லாரி, பாரம் தாங்காமல் 2ஆக உடைந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடகாவின் பெல்லாரி பகுதியில் இருந்து ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட இரும்பு ரோல்களை இந்த டாரஸ் லாரி மூலம் காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பிரித்துக் கொண்டுபோகும் பணி நடைபெற்றது. அப்போது வையாவூர் சாலையில் செல்ல திரும்பிய நிலையில் லாரி 2 பகுதியாக உடைந்தது. இதை அடுத்து போலீசார் நீண்ட நேரத்திற்கு பிறகு லாரியை அப்புறப்படுத்தினர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதித்தது.

Tags:    

மேலும் செய்திகள்