முதுமலை வனப்பகுதியில் தொடர்மழையால் பச்சைப் பசேல் என காணப்படும் நிலையில், கர்நாடகா, கேரளா போன்ற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த யானைகள் கூட்டம் மீண்டும் திரும்பியுள்ளன... மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையை, இரண்டு குட்டிகளுடன் ஒரு யானை கூட்டம் பாதுகாப்பாக கடந்தது...அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு யானை, ஒரு தலைவனைப் போல மற்ற யானைகள் அனைத்தும் பாதுகாப்பாக சாலையைக் கடந்து வனப்பகுதிக்குள் செல்லும் வரை காவல் காத்தது... இது பலரையும் ரசிக்க வைத்தது...