வீட்டின் வெளியே இருந்த சேவலை வேகமாக கவ்வி சென்ற சிறுத்தை
பாலக்கோடு அருகே வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த சேவலை சிறுத்தை ஒன்று கவ்வி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி அடுத்த வாழைத்தோட்டம் பகுதியில் விநாயகம் என்பவரது வீட்டிற்கு வெளியே இருந்த சேவலை, அதிகாலையில் சிறுத்தை,ஒன்று கவ்விச் சென்றது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் நாயை கவ்வி சென்ற சிறுத்தை தற்பொழுது, அதே வீட்டில் சேவலை கவ்வி சென்ற சம்பவம் அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.