வாணியம்பாடி அருகே, மணல் கடத்தலை தட்டிக் கேட்ட குடும்பத்தினர் மீது மணல் கொள்ளையர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், இளையநகரம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், சீனிவாசன், ஜெயவேல் ஆகியோரின் குடும்பத்தினர், காணாற்றின் கரையில் மணல் திருட்டு குறித்து, அவர்களின் தாய் பாப்பம்மாள் தட்டிக் கேட்டுள்ளார். அதில், ஆத்திரமடைந்த மணல் கொள்ளையர்கள், பாப்பம்மாளையும் மகன் ஜெயக்குமாரையும் கற்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்பு, வாணியம்பாடி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றபோது, மீண்டும் மணல் கொள்ளையர்கள் அவர்களது குடும்பத்தினரின் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து சீனிவாசன் அளித்த புகாரின் பேரில், வாணியம்பாடி கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.