சென்னை ஈ.சி.ஆர் சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக, அமைக்கப்பட உள்ள புதிய உயர்மட்ட பாலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 14 கி.மீ நீளத்திற்கு, நான்கு வழி உயர்மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த பாலம் அமைக்கப்பட்டால் விபத்துக்கள் குறையும் எனவும், பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோர் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் எளிதாக பயணிக்க முடியும் எனவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.