நடுரோட்டில் வெடித்து சிதறிய அரசு பஸ்ஸின் டயர்..! அச்சத்தில் அலறிய பயணிகள்
திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அருகே, அரசுப் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து புகை வெளியேறியதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். திருப்பத்தூரிலிருந்து ஆந்திரா மாநிலம் திருப்பதி வரை செல்லும் அரசு பேருந்து, நிலாவூரிலிருந்து 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது, ஏலகிரிமலை அடிவாரம் பொன்னேரி பகுதியில் திடீரென பேருந்தின் முன் டயர் வெடித்துள்ளது. அப்போது பேருந்திற்குள் மளமளவென புகை கிளம்பியுள்ளது. இதனை அறிந்த ஓட்டுனர் ரமேஷ் சாமார்த்தியமாக பேருந்தை நிறுத்தி பயணிகளை வெளியேறுமாறு கூறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.