மதுபோதையில் தகராறு - சொந்த அண்ணனையே அடித்துக் கொன்ற தம்பி.. சேலத்தில் பரபரப்பு

Update: 2025-04-06 02:15 GMT

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே மதுபோதையில் அண்ணனை தம்பியே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடங்கணசாலை அருகே, கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான சிவமூர்த்தி, அவரது தம்பி கவுதமராஜ் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக மதுபோதையில் இருவரும் சண்டையிட்டபோது, கவுதமராஜ் கட்டையால் தாக்கியதில் சிவமூர்த்தி உயிரிழந்தார். அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். தனது அண்ணனையே அடித்துக் கொன்ற கவுதமராஜை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்