நொடி பொழுதில் நினைத்து பார்க்க முடியா கொடுரம்..சம்பவ இடத்திலேயே பிரிந்த உயிர்
பெரம்பலூர் அருகே உள்ள பெரியவடகரை கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி(35) சித்ரா தம்பதியினர் இவர்கள் இன்று வேப்பந்தட்டையில் உள்ள கனரா வங்கிக்கு வடகரையில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் வெண்பாவூர் காட்டுப்பகுதியில் சென்றபோது அப்போது பெரம்பலூரில் இருந்து கள்ளக்குறிச்சி செல்லும் அரசு பேருந்து மீது மோதியதில் கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்த கைகளத்தூர் போலீசார் உடர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த விபத்து குறித்து அரசு பேருந்து ஓட்டுனர் சின்னதம்பியிடம் கைகளத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்