Kanchipuram Boy Murder | சிறுவனுக்கு கல்லால் சமாதி கட்டிய வடமாநில கொடூரன்.. காஞ்சியில் கோரம்
ஓரினசேர்க்கைக்கு மறுத்ததால் சிறுவன் கொடூர கொலை - வடமாநில இளைஞர் கைது
ஸ்ரீபெரும்புதூர் அருகே அடர்ந்த புதரில் அழுகிய நிலையில், பிணமாக மீட்கப்பட்ட 5 வயது சிறுவன் மீட்கப்பட்டிருக்கிறான். மாயமான சிறுவன் பிணமாக மீட்கப்பட்டதன் உறைய வைக்கும் பின்னணி என்ன?
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஓரினசேர்க்கைக்கு மறுத்ததால் 5 வயது சிறுவன் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் கடந்த 9ஆம் தேதி காணாமல் போனதாக சிறுவனின் தாய் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக 12ஆம் தேதி வழக்கு பதியப்பட்டு, சிறுவனை போலீசார் தேடி வந்த நிலையில், அவனது சொந்த கிராமத்திலேயே அடர்ந்த முட்புதரில் அழுகிய நிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்.
முதலில், சிறுவன் தவறி விழுந்து, தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்து விட்டதாக போலீசார் கருதினர்.
எனினும், மரணத்தில் இருந்த சந்தேகம் துரத்த, அந்த பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருக்கும் குடியிருப்பில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் சிறுவனை இளைஞர் ஒருவர் அழைத்து சென்றது பதிவாகி இருப்பதை கண்ட போலீசார் விசாரணை துரிதப்படுத்தினர்.
அதன் அடிப்படையில், அசாமைச் சேர்ந்த போல்தேவ் என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
இதில், சிறுவன் ஓரினசேர்க்கைக்கு மறுத்ததால் அடர்ந்த முட்புதர்க்கு அழைத்து சென்று கல்லால் அடித்துக் கொன்றதாக போல்தேவ் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலத்தை கொடுத்துள்ளார்.
தொடர்ந்து அவரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த சம்பவம் சிறுவன் குடும்பத்தார் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிராமத்தையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.