"பிரதமர் மவுனம் காத்தால் நாடாளுமன்றத்தை முடக்குவோம்" - திமுக MP டி.ஆர். பாலு
பஹல்காம் தாக்குதல் பற்றி நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்காவிட்டால் நாடாளுமன்றத்தை முடக்குவோம் என திமுக எம்.பி. டி.ஆர். பாலு எச்சரித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில், திமுக சார்பில் எம்பிக்கள் டி ஆர் பாலு, திருச்சி சிவா கலந்துகொண்டனர். பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது, கீழடி ஆய்வறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக தெரிவித்தனர். அகமதாபாத் விமான விபத்து, பீகாரில் வாக்காளர் பட்டியலில் மதிப்பாய்வு செய்யப்பட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என டி.ஆர். பாலு குறிப்பிட்டார்