கொட்டும் மழையில் பஸ்பமான கார் - அதிர்ச்சியில் உறைந்த மதுரை

Update: 2025-05-14 03:36 GMT

மதுரையில் மழையில் தீப்பற்றி எரிந்த கார்

மதுரை கலைஞர் நூலகம் அருகே, கொட்டும் மழையில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. காரின் முன்பகுதியில் புகை வெளியேறியதை பார்த்த ஓட்டுனர் உடனடியாக இறங்கினார். சிறிது நேரத்தில் தீ கொழுந்துவிட்டு எரிய, காரில் இருந்த பெட்ரோலுடன் சேர்ந்து ஏசி வெடித்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் முழுமையாக தீயை அணைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்