ஆர்ப்பரிக்கும் அருவி... எழில் கொஞ்சும் முதுமலை வனப்பகுதி அற்புதமான காட்சிகள்
தொடர்ந்து பெய்து வரும் மழையால் முதுமலை வனப்பகுதி நடுவே உள்ள மாயாற்றில் MGR அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.அடர்ந்த வனப்பகுதி அருகே பச்சை பசேல் என வனப்பகுதி காட்சியளிக்கும் நிலையில், அதன் நடுவே இந்த அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அமைந்துள்ளது.