ChennaiBomb | CouncilorOffice |கவுன்சிலர் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு-சென்னையில் அதிர்ச்சி
கவுன்சிலர் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு
சென்னை கண்ணகி நகரில் கவுன்சிலர் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கண்ணகி நகரில் உள்ள 196-ஆவது வார்டு அலுவலகம் மற்றும் மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருவர் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பினர். இதில், அலுவலகத்தில் உள்ள டியூப் லைட், பெயர் பலகை மற்றும் தலைவர்களின் புகைப்படங்கள் சேதமடைந்தன. கவுன்சிலர் அலுவலகத்தில் குண்டு வீசிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.