சங்கரன்கோவில் அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்ற 9ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரும்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 9ம் வகுப்பு மாணவன் குருபிரசாத். இவர் அதே கிராமத்தில் உள்ள கிணற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி உள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது மாணவன் குருபிரசாத் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.