சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டியைச் சேர்ந்த 70 வயது முதியவர் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். சிறுவயதில் கல்வியை துறந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான கோதண்டராமன், கல்விக்கு வயது தடை இல்லை என்பதை நிரூபித்துள்ளார். மூன்று முயற்சிகளுக்குப் பிறகு இந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதற்கு தனது மகன் மற்றும் பள்ளி மாணவர்கள் பெரிதும் ஊக்கமளித்ததாக தெரிவித்துள்ளார்.