"5 நாள் போராட்டத்திற்கு 9 நாள் Absent? ரூ.56 லட்சம் சுருட்டல்?"-பகீர் குற்றச்சாட்டு

Update: 2025-09-18 04:01 GMT

மதுரையில், 56 லட்சம் ரூபாய் சம்பள பாக்கியை கேட்டதற்குப் பழிவாங்கும் விதமாகவே 5 தூய்மை பணியாளர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாக, தனியார் ஒப்பந்த நிறுவனம் மீது CITU தொழிற்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த மாதம் நடந்த 5 நாள் வேலைநிறுத்த போராட்டத்தின் போது, 3,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு 9 நாட்களுக்கு Absent போட்டு, 56 லட்சம் ரூபாய் சம்பளத்தை அபகரித்துள்ளதாகவும், மாநகராட்சி ஆணையரின் தவறான அணுகுமுறை காரணமாகவே இப்பிரச்சனை நீடிப்பதாகவும், தொழிலாளர்கள் வேலைப்பார்க்கத் தயாராக இருந்தும், தனியார் நிறுவனம் அவர்களை மிரட்டுவதாகவும் CITU தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்