60 நொடியில் 700 தோட்டாக்கள் சீறும்...மின்னல் வேகத்தில் சுக்கு நூறாக்கும்

Update: 2025-07-20 04:14 GMT

0 நொடியில் 700 தோட்டாக்கள் சீறும்...

மின்னல் வேகத்தில் சுக்கு நூறாக்கும்

போர் அரக்கனை இறக்கிய இந்தியா

நிமிடத்திற்கு 700 தோட்டக்களை 800 மீட்டர் தூரம் வரை சுடக்கூடிய 'ஷேர்' என்ற AK-203 ரைபிள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் உள்ள ‘இந்தோ-ரஷ்ய ரைபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் 'ஷேர்' என பெயரிடப்பட்ட AK-203 ரக துப்பாக்கிகள் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.

K-203 ரைபிள் நிமிடத்திற்கு 700 தோட்டாக்கள் வரை 800 மீட்டர் தூரத்திற்கு சுடக்கூடியதாகும். இது பழைய INSAS துப்பாக்கிகளை விட சிறந்த செயல்திறனைக் கொண்டது என கூறப்படுகிறது.

5 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தின் கீழ், 6 லட்சத்துக்கும் மேற்பட்ட AK-203 ரைபிள்கள் இந்திய ஆயுதப் படைகளுக்கு வழங்கப்பட உள்ளன.

2030க்குள் அனைத்து ரைபிள்கள் விநியோகத்தை  முடிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தற்போதுவரை சுமார் 48 ஆயிரம் ரைஃபிள்கள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.

3 புள்ளி 8 கிலோ எடையுடன் அளவில் சிறியதாக இருக்கும் இந்த AK-203 ரைபிள்கள் 7 புள்ளி 62x39 மில்லி மீட்டர் கார்ட்ரிட்ஜ் கொண்டு இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்