"7 குடும்பத்தினருக்கு, ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் கொலை மிரட்டல்"

Update: 2025-06-03 05:43 GMT

கரூர் மாவட்டம், தோகைமலையை அடுத்த பாரப்பட்டி கிராமத்தை சேர்ந்த 7 குடும்பத்தினருக்கு, அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு சமூகத்தினர் கொலைமிரட்டல் விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்துள்ளனர். தங்களை பொது வழியில் நடக்க கூடாது என்றும், நேரிலும், செல்போன் மூலமாக தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்