"26 வயதுக்கு 6 நாட்கள் குறைவு" - கணவனை இழந்த பெண்ணின் பணி நியமன ஆணையை வாங்க மறுத்த அதிகாரிகள்
வாணியம்பாடியில் அங்கன்வாடி பணிக்கான நியமன ஆணையை அதிகாரிகள் வாங்க மறுத்ததாக கூறி குழந்தையுடன் பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனாவால் கணவரை இழந்து குழந்தைகளுடன் வசித்து வரும் சசிகலா அங்கன்வாடி பணியாளர் தேர்வில் பங்கேற்று கடந்த 20ம் தேதி பணியாணை பெற்றுள்ளார். பணியில் சேர சென்றபோது அதிகாரிகள் 26 வயதிற்கு 6 நாட்கள் குறைவாக இருப்பதாக கூறி பணியாணையை ஏற்க மறுத்துள்ளனர்.