Ooty News | Garlic Theft | 40 மூட்டை வெள்ளை பூண்டுகள் மாயம் - காவல்துறை விசாரணை
உதகையில் அறுவடை செய்து விற்பனைக்காக வைக்கப்படிருந்த 40 மூட்டை வெள்ளை பூண்டு மாயமாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் ஜெகதீஷ் என்பவர் குத்தகைக்கு நிலம் எடுத்து, வெள்ளை பூண்டு பயிரிட்டுள்ளார். வெள்ளை பூண்டு அறுவடை முடிந்து, 40 மூட்டைகளில் கட்டி விவசாய நிலத்தில் வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் காலை நிலத்திற்கு வந்து பார்த்தபோது 40 மூட்டைகள் மாயமாகியுள்ளதை கண்டு ஜெகதீஷ் அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.