சென்னையில் 357 வாகனங்கள் விதிகளை மீறி பதிவு

Update: 2025-06-06 07:56 GMT

தமிழ்நாட்டில் 2020ஆம் ஆண்டுக்கு பின், பி.எஸ்.4 வாகனங்கள் மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னையில் 357 வாகனங்கள் விதிகளை மீறி பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. RTO அலுவலர்கள் யூசர் ஐடி, பாஸ்வேர்டு ஆகியவற்றை தவறாக பயன்படுத்தி ஆர்டிஓ அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக இருந்த பூபதி என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடியாக பதிவு செய்யப்பட்ட 357 வாகனங்களின் பட்டியலையும் தயாரித்து போக்குவரத்து இணை ஆணையர் பொன் செந்தில்நாதன் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்