பறிபோன 3 தமிழர்கள் உயிர்-நேரில் வந்த ஆட்சியர் -உறவினர்கள் கண்ணீர் பேட்டி
கொல்கத்தா ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாவிற்காக சென்ற வியாபாரி பிரபுவின் குடும்பத்தினர் கொல்கத்தா தீ விபத்தில் சிக்கியதாகவும், பிரபு மற்றும் அவரது மனைவி மதுமிதா இருவரும் உயிர்தப்பிய நிலையில் குழந்தைகள் தியா, ரிதன், பிரபுவின் தந்தை முத்துகிருஷ்ணன் ஆகிய மூவரும் உயிரிழந்துவிட்டனர். உயிரிழந்த மூவரின் உடலை சொந்த ஊரான கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்திற்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கேட்டுக்கொண்டனர்...