பள்ளியில் உயிரிழந்த 2ம் வகுப்பு மாணவன் - மகனின் உடலை பார்த்து கதறி துடித்த பெற்றோர்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்ததால், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிங்கம்புணரியில் செயல்படும் தனியார் பள்ளியில், மதுராபுரி வேங்கை பெட்டியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரின் 7வயது மகன் அஸ்விந்த் 2ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். வழக்கமான பள்ளி வாகனம் வராமல், காரில் அழைத்துச் சென்றதாக கூறப்படும் நிலையில், மாலையில் மாணவனுக்கு வலிப்பு வந்ததால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று பார்த்த பெற்றோர், மாணவன் இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதனர். அதே நேரத்தில், பள்ளி நிர்வாகத்தின் அனைத்து எண்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாணவனின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.