Goverment school | students | ஜெர்மனிக்கு கல்வி சுற்றுலா செல்லும் 22 அரசு பள்ளி மாணவர்கள்
தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 அரசு பள்ளி மாணவ மாணவிகள்
5 நாள் கல்வி சுற்றுலா பயணமாக சென்னையில் இருந்து ஜெர்மன் நாட்டுக்கு புறப்பட்டனர். பள்ளி அளவில் சிறந்து விளங்கும் மாணவர்கள் புகழ்பெற்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.அதன்படி அரசு பள்ளியை சேர்ந்த 22 மாணவ மாணவிகள், 2 ஆசிரியர்கள் என 24 பேர் 5 நாள் ஜெர்மனிக்கு புறப்பட்டனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அரசு பள்ளி மாணவர்கள் முதன்முறையாக விமானத்தில் பறப்பதற்கு மகிழ்ச்சியாக இருப்பதாக கூறி தமிழக முதலமைச்சருக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தனர்.