Chennai Dog Bite | விளையாடும்போது 2 வயது குழந்தை கன்னத்தை கவ்விய தெருநாய்.. சென்னையில் பயங்கரம்
சென்னை கொடுங்கையூரில் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தையை தெருநாய் கடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்தமிழ்நகர் 17வது தெருவை சேர்ந்த முகமது அப்துல் - மும்தாஜ் தம்பதியின் 2 வயது குழந்தை வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது தெருநாய் கடித்ததில் குழந்தைக்கு கன்னத்தில் காயம் ஏற்பட்டவே, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.