சாலையை கடக்க முயன்ற 2 சிறுவர்கள் மின்சாரம் தாக்கி படுகாயம்
சென்னையில் சாலையை கடக்க முயன்ற 2 சிறுவர்கள் மின்சாரம் பாய்ந்து படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பிளாட்பாரத்தில் வசித்து வரும் மாரியம்மா- செல்லப்பாண்டி தம்பதியின் மகன்கள், நண்பர்களுடன் பூங்காவில் விளையாடிவிட்டு, நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மழை பெய்ததால் சாலையில் நீர் தேங்கியிருந்த நிலையில், 4 சிறுவர்களும் சாலையை கடக்க முயன்ற போது, சாலை தடுப்பில் சென்ற மின் வயரில் இருந்து திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் காயமடைந்த இருவரையம் அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் ஒரு சிறுவன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.