நெல்லை மாவட்டம் அம்பை தாமிரபரணி ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்த நிலையில், சுமார் 18 பேர் தண்ணீரில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
நெல்லை மாவட்டம் அம்பை தாமிரபரணி ஆற்றில் குளிக்க வந்த பெண்கள் உள்பட சுமார் 18 பேர், தாமிரபரணி ஆற்றில் கார் பருவ சாகுபடிக்காக ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் திடீரென நீர்வரத்து அதிகரித்ததால் நடு ஆற்றில் சிக்கித் தவிப்பு;
தொடர்ந்து இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அம்பை தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி அவர்களை பாதுகாப்பாக தற்போது மீட்டு வருகின்றனர்..