பிரபல பிரியாணி கடைகளில் அதிரடி ரெய்டு.. கெட்டுப் போன `18 கிலோ இறைச்சி’..
ஈரோட்டில் செயல்படும் அசைவ உணவகங்களில் காலவதியான அசைவ உணவுகள் வழங்கப்படுவதாக ஆட்சியர் ராஜகோபால் சுன்கராவிற்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து ஆட்சியரின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் தலைமையிலான குழுவினர் ஈரோடு மாநகர பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல பிரியாணி கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் திடீர் ஆய்வு நடத்தினர். ஆய்வில் 18 கிலோ கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகளை பினாயில் ஊற்றி அதிகாரிகள் அழித்தனர்.