கஞ்சா போதையில் அடுத்தடுத்து 18 கார் கண்ணாடி உடைப்பு.. சூடான சுற்றுலா ஸ்பாட்

Update: 2025-05-08 03:21 GMT

கொடைக்கானலில், கஞ்சா போதையில், சுற்றுலா பயணிகளையும், கார்களையும் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், சுற்றுலாபயணிகளின் வருகை தற்போது அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பூம்பாறை மலை கிராமத்திற்கு செல்லக்கூடிய சாலையில், இரு சக்கர வாகனத்தில் கஞ்சா போதையில் உலா வந்த 3 நபர்கள், 18 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து, வாகன ஓட்டுநர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை தாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட உள்ளூர்வாசி அளித்த புகாரின் பேரில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் குற்றவாளிகள் 3 பேரும் அப்பகுதியில் உள்ள மதுபானை கடை ஒன்றில் தகராறில் ஈடுபட்ட சிசிடிவி காட்சியும் தற்பொது வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்